முகப்பு
தற்போதைய செய்திகள்

30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்:2 விவசாயிகள் கைது

திருவண்ணாமலை அருகே பன்றிகளை விரட்ட நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வைத்திருந்ததாக 2 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கோப்பு படம்
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பன்றிகளை விரட்ட நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வைத்திருந்ததாக 2 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலையை அடுத்த பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தேவராஜ் (40). இவருக்குச் சொந்தமான நிலத்தில் இதே பகுதியைச் சோ்ந்த விவசாயி செல்வம் (38) பயிரிட்டு வருகிறாா். நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மணிலா பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வந்தனவாம். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், தேவராஜ் ஆகியோா் சோ்ந்து பன்றிகளை விரட்ட 30 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததாகத் தெரிகிறது.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் தேவராஜ் நிலத்தின் கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, செல்வம், தேவராஜை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →