இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த நாலாவது பிரதமர் மோடி!
இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த நாலாவது பிரதமர் பெருமையைப் பெறுகிறார் நரேந்திர மோடி.
தற்போதைய செய்திகள்இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த நாலாவது பிரதமர் மோடி!
இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த நாலாவது பிரதமர் பெருமையைப் பெறுகிறார் நரேந்திர மோடி.
இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த நாலாவது பிரதமர் பெருமையைப் பெறுகிறார் நரேந்திர மோடி.
நாட்டின் வரலாற்றில் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் வருகிறார் மோடி.
எனினும், அடல் பிகாரி வாஜபேயியை விஞ்சி, நீண்ட காலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் மோடி.
2014 மே 26 ஆம் நாள் நாட்டின் 14-வது பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 மே 30 ஆம் மீண்டும் பிரதமர் பொறுப்பேற்றார்.
நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவாஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். டாக்டர் மன்மோகன் சிங் தொடர்ந்தாற்போல 10 ஆண்டுகள்.
தங்களுடைய பதவிக் காலத்தை முடிக்காத காங்கிரஸ் அல்லாத மற்ற பிரதமர்கள்: மொரார்ஜி தேசாய் (மார்ச் 24, 1977 - ஜூலை 28, 1979), சரண் சிங் (ஜூலை 28, 1979 - ஜனவரி 14, 1980), வி.பி. சிங் (டிசம்பர் 2, 1989 - நவம்பர் 10, 1990), சந்திரசேகர் (November 10, 1990 - ஜூன் 21, 1991), எச்.டி. தேவெ கௌட (ஜூன் 1, 1996 - ஏப்ரல் 21, 1997) மற்றும் ஐ.கே. குஜ்ரால் (ஏப். 21, 1997 - மார்ச் 19, 1998).
74-வது சுதந்திர நாளைக் கொண்டாட இரு நாள்களே இருக்கும் நிலையில் நீண்ட காலம் பிரதமராக இருந்த நாலாமவர் என்ற தகுதியைப் பெறுகிறார் மோடி.