மத்தியப் பிரதேசத்தில் போபால் நகரில் பலத்த மழை காரணமாக வரலாற்றுப் புகழ்மிக்க மோத்தி மஹாலின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. இடிபாடுகளை அகற்றத் தயாராகிறார்கள் மீட்புப் படையினர்.
லடாக்கில் லே பகுதியில் திங்கள்கிழமை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை நோக்கிச் செல்லும் ராணுவ வாகனம். கிழக்கு லடாக்கில் சனிக்கிழமை இரவு சீன ராணுவத்தினர் அத்துமீறிச் சண்டையிட்டது குறிப்பிடத் தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் லக்னௌ நகரில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராகத் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சமாஜவாதி கட்சித் தொண்டர்களைத் தடியடி நடத்திக் கலைக்கும் காவல்துறையினர்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்கு இடையே, ஹைதராபாத் நகரில் முஹர்ரம் திருநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாகச் சென்ற ஷியா முஸ்லிம் வகுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.