புறநகர் ரயில் 
தற்போதைய செய்திகள்

புறநகர் ரயில் சேவை: நாளை(டிச.23) முதல் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை புறநகர் ரயில்களில் நாளை(டிச.23) முதல் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

DIN

சென்னை புறநகர் ரயில்களில் நாளை(டிச.23) முதல் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புறநகர் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. பின், கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கும் பெண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்றின் பரவல் சென்னையில் குறைந்து வரும் நிலையில், கூட்ட நெரிசல் குறைவாக உள்ள நேரங்களில் அனைத்து பயணிகளும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை புறநகர் ரயில்களில் நாளைமுதல் கூட்ட நெரிசல் குறைவான நேரங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களான காலை 7 மணிமுதல் 9.30 மணிவரை, மாலை 4.30 மணிமுதல் 7 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

மேலும், பயணிகளுக்கு ஒருவழி பயணத்திற்கு மட்டுமே டிக்கெட்  வழங்கப்படும், கூட்ட நெரிசல் குறைவான நேரத்திற்கு முன்பே டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டீவ் ஸ்மித் 2.0..! டி20 உலகக் கோப்பையில் இடம்பெறாதது ஏன்?

பாகிஸ்தானில் பனிச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!

நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்!! - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நக்சல் இல்லாத மாவட்டமாக மாறிய நவரங்பூர்!

தங்கம், வெள்ளி இருக்கட்டும்! பிளாட்டினம் விலை நிலவரம் தெரியுமா?

SCROLL FOR NEXT