முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரிட்டனிலிருந்து வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
மத்திய அரசு
பகிர்:

பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளை கண்காணிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதில், நவம்பர் 25 முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைத்து பயணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளால் 14 நாள்களுக்கு தொடர்புகொண்டு உடல்நிலைக் குறித்து கண்காணிக்கப்படும்.

பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளின் சளி மாதிரிகளை புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர், வீட்டிற்கு சென்று 14 நாள்கள் சுயதனிமைப் படுத்திக் கொள்ளவேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்தியா - பிரிட்டன் இடையே இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments