முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி

புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Updated On : 22 டிசம்பர், 2020 at 2:17 PM
புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:41 PM

புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புத்தாண்டில் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் 200 பேர் வரையில் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் டிசம்பர் 31ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.