ரயில்வே பணிமனையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை.  
தற்போதைய செய்திகள்

கோவை ரயில்வே பணிமனையில் கிறிஸ்துமஸ் பண்டிகை

சேலம் கோட்டம், கோவை ரயில்வே பணிமனை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினர்.

DIN


சேலம் கோட்டம், கோவை ரயில்வே பணிமனை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினர்.

வருடம் தோறும் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடும் பனைமனை ஊழியர்கள் இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் பல்வேறு பண்டிகைகள் கொண்டாட முடியாமல் போனது. 

இந்நிலையில், பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நீண்ட நாள் இடைவெளிக்கு பின் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் சாண்டா வேடமணிந்தும் சாண்டா முகமுடி அணிந்தும் ஆடல் பாடல்களுடன் இப்பண்டிகையை கொண்டாடினர்.

நீண்ட நாள்களுக்கு பிறகு பணிமனையில் இது போன்று மகிழ்ச்சியான நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், வருகின்ற வருடம் அனைவருக்கும் இனிதே அமைய வேண்டும் என்றும் பணிமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT