நாட்டில் மேலும் 23,950 பேருக்கு கரோனா பாதிப்பு
நாட்டில் மேலும் 23,950பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,99,066 ஆக அதிகரித்துள்ளது.
புது தில்லி: நாட்டில் மேலும் 23,950பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,99,066 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் தெரிவித்ததாவது:
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 333 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,46,444 ஆக அதிகரித்தது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது இது 1.45 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 26,895 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கரோனாவில் இருந்து இதுவரை 96,63,382 போ் விடுபட்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 95.69 சதவீதமாகும்.
இப்போதைய நிலையில் 2,89,240 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 2.86 சதவீதமாகும்.