முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 18, 2020

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:54 PM
பகிர்:

குஜராத்தில் ஆமதாபாத்தில் அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையையொட்டி வைக்கப்பட்டுள்ள பேனரில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்ப். 

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம், உலகின் பழமையான ஜனநாயகத்தைச் சந்திக்கிறது - அதிபர் டிரம்ப் வருகையையொட்டி, ஆமதாபாத்தில்  பாலச் சுவர்களிலும் சுவர்களிலும் வரவேற்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியொன்றில் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடிய ரோபோ பெண் சோபியா. இதுவொரு ஹாங்காங் நிறுவனத் தயாரிப்பு. 

சீனாவில் வூஹானிலிருந்து திரும்பி வந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக மனேசரில் தனிப்படுத்தப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள், நோய்ப் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுப் படிப்படியாக வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர். தங்கள் உடைமைகளுடன் இல்லங்களுக்குத் திரும்பும் ஒரு குழுவினர். 

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நெசாங் அருகே நிலச் சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை எண் 5 தடைப்பட்டுள்ளது. இதனால் முற்றிலுமாகப் போக்குவரத்து நின்றுவிட்டது.

சீனாவில் வூஹானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்துகளைத் தயார் செய்யும் செவிலியர்.

ஜப்பானில் டோக்கியோ நகரில் கரோனா வைரஸ் அச்சத்தால் முகக்கவசம் அணிந்து செல்லும் மக்கள் திரள்.

மும்பையில் நடைபெற்ற புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானியின் காலண்டர் 2020 அறிமுக விழாவில் ஹிந்தி நடிகை வித்யா பாலன்.

புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானியின் காலண்டர் 2020 அறிமுக விழாவில் ஹிந்தி நடிகை சன்னி லியோன்.

இங்கிலாந்தில் செவர்ன் பகுதியில் சூழ்ந்து நிற்கும் வெள்ளம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.