முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 23, 2020

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:35 PM
பகிர்:

குடியரசு நாள் விழா அணிவகுப்புக்காகப் புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற முழுமையான அணிவகுப்பு ஒத்திகையின்போது பங்கேற்ற தமிழக அரசின்  அலங்கார ஊர்தி. 

அமேதியில் சாலை விபத்தொன்றில் இறந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து (வியாழக் கிழமை) ஆறுதல் கூறுகிறார்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி.

பெங்களூருவில் நடைபெறும் விண்கலங்கள் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்வதற்காக உருவாக்கப்படும் ரோபோ பெண்ணின் முன்மாதிரியுடன் கைகுலுக்குகிறார் ஒரு காவலர்.

அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற  ஆயுதங்களைத்  தீவிரவாதிகள் கையளிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சர்வானந்த சோனோவால். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள், தங்களிடமிருந்த 177 ஆயுதங்களை ஒப்படைத்து முதல்வர் முன் சரணடைந்தனர்.

அஸ்ஸாம் முதல்வர் முன் சரணடைவதற்காக வந்த தீவிரவாதிகள்.

சீனத் தலைநகர் பெய்ஜிங் பன்னாட்டு விமான நிலையத்தில்  வியாழக்கிழமை பயணிகளை வரவேற்பதற்காகக் காப்புத் துணிகளைக் கட்டியபடி காத்திருக்கும் மக்கள். கரோனா வைரஸ் காரணமாகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது சீனா.

பிலிப்பின்ஸில் தலைநகர் மணிலாவின் பன்னாட்டு விமான நிலையத்தில் வெப்பவழிக் கண்காணிப்பு சாதனத்தின் மூலம் நாட்டுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். சீனாவில் வூகானில் கரோனா வைரஸால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கரோனா நகர விமான நிலையத்தில் தீப்பற்றி எரியும் சிறுரக விமானம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.