பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 30, 2020
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்வு தில்லியில் இன்று நடைபெற்றது.
கரோனா வைரஸ் பாதித்த வூஹான் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் புறப்பட்டுச் செல்லும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர், ஷின்ஜியாங் மருத்துவப் பல்கலை. வளாகத்தில் தன் குடும்பத்தினரிடம் விடைபெறும் நெகிழ்ச்சியான தருணம்.
சீனாவில் வூஹானில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தற்காலிக மருத்துவமனையின் பணிகள்.
கேரள சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதி நிலை அறிக்கைக் கூட்டத்துக்காக வந்த ஆளுநர் ஆரிப் முகமது கானை முற்றுகையிட்ட காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள். பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்ட நிராகரிப்புத் தீர்மானத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்திருந்தார் ஆரிப் முகமது கான்.
மகாராஷ்டிரத்தில் ஷிர்டியிலுள்ள சாயிபாபா கோவிலில் புதன்கிழமை வழிபாடு நடத்திய ஹிந்தித் திரையுலக பழம்பெரும் நடிகர் ஜிதேந்திரா கபூர், அவருடைய மகளும் தயாரிப்பாளருமான ஏக்தா கபூர்.
புது தில்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்திற்குப் புதன்கிழமை வந்திருந்த பாலியல் வன்கொடுமைப் படுகொலையில் உயிரிழந்த நிர்பயாவின் தாய், தந்தை. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் குமார் சிங் என்பவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெய்யும் பனிப் பொழிவால் புதன்கிழமை போர்த்தப்பட்டுள்ள மலைநகரான சிம்லா.
ஹிமாச்சலில் நட்டியில் பனித் துகள்களால் போர்த்தப்பட்டுள்ள மலைகள்.
ஹிமாச்சலில் பெய்யும் பனி காரணமாக மூடப்பட்டிருக்கும் ரயில் பாதை.
சிம்லாவில் நார்கண்டா பகுதியில் பனியால் நிறைந்து மூடப்பட்ட தெரு.
குலு மாவட்டம் மலானா, பனிப் பொழிவில்.