முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் ஜூலை 31 வரை கல்வி நிலையங்கள் மூடல்

ஒடிசாவில் ஜூலை 31 வரை அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 4 ஜூன், 2020 at 11:43 AM
பகிர்:

புவனேசுவரம்: ஒடிசாவில் ஜூலை 31 வரை அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் மாதம் முழுவதும் 11 மாவட்டங்களில் வார இறுதியின் இரு நாள்களும் - சனி, ஞாயிறு - பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கரோனா அச்சம் காரணமாக ஜூலை 31 வரை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

Advertisement

ஒடிசாவில் ஜூன் 2 ஆம் தேதி வரை 1.62 லட்சம் பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் இவர்களில் 2,388 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1416 பேர் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர், 7 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.