தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில்60 பேருக்கு கரோனா தொற்று
சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை சென்னையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது.
அந்தவகையில் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் தண்டையாா்பேட்டை மண்டலத்தில் உள்ள சோலையப்பன் தெருவில் மட்டும் 60 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது வருகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.