தற்போதைய செய்திகள்

ஒரே நேரத்தில் குவிந்த முன்னாள் ராணுவத்தினர்: மதுரையில் பரபரப்பு

DIN

மதுரையில் ஒரே நேரத்தில் முன்னாள் ராணுவத்தினர் சுமார் ஆயிரம் பேர் குவிந்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கலை நகர் பகுதியில் முன்னாள் ராணுவத்தினருக்கான பண்டகசாலை செயல்பட்டு வருகிறது. இந்த பண்டக சாலை திறக்கும் நேரத்துக்கு முன்பே ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் வரத்தொடங்கினர். நேரம் ஆக ஆக பண்டக சாலை முன்பு கூட்டம் அதிகரத்தது. 

முன்னாள் ராணுவத்தினருக்குரிய மதுபானங்களை வாங்குவதற்கான டோக்கன் பெற திங்கள்கிழமை வர அறிவுறுத்தியிருப்பது தெரிய வந்தது. கரோனா பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர்  கலைநகர் பகுதியில் கூடியது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் கரோனா  பரவல் தடுப்பு பணிக்கான பறக்கும் படை குழு அப்பகுதிக்கு விரைந்து வந்த்து. வட்டாட்சியர் எஸ்.எஸ். சிவக்குமார், காவல் ஆய்வாளர் காந்திமதி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கூட்டத்தை சமூக இடைவெளி விட்டு வரிசைப்படுத்த முயற்சித்தனர். 

ஆனால் அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் முன்னாள் ராணுவத்தினர் பண்டகசாலை அதிகாரிகளை தொடர்பு கொண்டு டோக்கன் வழங்குவதை நிறுத்தினர். அதையடுத்து அங்கு சற்றுநேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் பறக்கும் படையினர் அவர்களை கலைந்த செல்ல வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT