தற்போதைய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்புத் திட்டம்: பிரதமர் தொடக்கிவைத்தார்

DIN

உத்தரப் பிரதேசத்திலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தற்சார்பு வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கரோனா நோய்த் தொற்றுப் பரவலால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வேலைவாய்ப்புகளை இழந்த சுமார் 1.25 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

திட்டத்தைத் தில்லியிலிருந்தவாறு காணொலி வாயிலாக நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

உ.பி.யின் 31 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

காரிப் பருவ வேலைவாய்ப்பு இயக்கத்தின் பகுதியாக, ஜூன் 20 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம் நாட்டில் 6 மாநிலங்களிலுள்ள 116 மாவட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT