பாரதிராஜாவின் வீடு, தேனி 
தற்போதைய செய்திகள்

தேனியில் தனிமைப்படுத்தப்பட்டார் பாரதிராஜா

சென்னையிலிருந்து தேனிக்கு வந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா செவ்வாய்கிழமை, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

DIN


சென்னையிலிருந்து தேனிக்கு வந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா செவ்வாய்க் கிழமை அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

தேனி மாவட்ட எல்லைகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுத்தி, 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சென்னையிலிருந்து தேனிக்கு வந்த பாரதிராஜா தேவதானப்பட்டி அருகே மாவட்ட எல்லையில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு கரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், கரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து அவர் தேனிக்கு வந்திருப்பதால் தேனி, என்.ஆர்.டி.நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதற்கான அடையாள வில்லையை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது வீட்டுச் சுவரில் ஒட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT