தற்போதைய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் மேலும் ரூ. 5.1 கோடி

DIN

ஈரோடு: தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் மீண்டும் ரூ. 5.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அமைந்துள்ள தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த முயற்சிக்கு உதவும் பொருட்டு, உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சக்தி மசாலா நிறுவனம் கடந்த மார்ச் 30 ஆம் தேதி  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது.

முதல்வரின் தலைமையின் கீழ்  தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்க் கால அடிப்படையில் இரவு பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணியாற்றி வருவதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து அனைவருக்கும் தனது வணக்கத்தையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளுக்கு உதவும் வண்ணம் மே 11 ஆம்  தேதி இரண்டாவது முறையாக ரூ. 5.10 கோடி நிதியைத் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது.

இதுவரை  சக்தி மசாலா நிறுவனம் தமிழக முதல்வரின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிகைகளுக்காக  மொத்தம் ரூ.10.10 கோடி நிவாரண நிதியாக வழங்கி அரசுக்கும் தமிழக மக்களுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருப்பதாகவும் செய்திக்குறிப்பொன்றில் சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT