குமரி மாவட்ட அணைகள் ஜூன் 8-ல் திறப்பு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,சித்தாறு I மற்றும் II அணைகளிலிருந்து ஜூன் 8 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணம் கால்
பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காகப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,
சித்தாறு I மற்றும் II அணைகளிலிருந்து ஜூன் 8 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுபற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பொன்றில், வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கோதையாறு பாசனத்திற்கு 8.6.2020 முதல் 28.2.2021 வரை
நாள் ஒன்றுக்கு 850 கன அடி/வினாடிக்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,
சித்தாறு I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும்
பட்டணம்கால் பாசனப் பகுதிகளின் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி
பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.