தற்போதைய செய்திகள்

தில்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

DIN

திடீர் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

திடீர் பயணமாக புதன்கிழமை காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தில்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வரும் வெள்ளிக்கிழமை வரை தில்லியில் தங்கியிருந்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக ஆளுநர் தரப்பில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆளுநர் புரோகித் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழக அரசியல் நிலவரம், கரோனா தொற்று பரவல் மற்றும் சட்டம் ஒழுங்குபிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் வேல்நாத்திரை, பேரறிவாளனின் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.

வெள்ளிக்கிழமை வரை தில்லியில் தங்க உள்ள ஆளுநர் புரோகித் குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளார்.

மேலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் புரோகித்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT