பெயரில் மாற்றமில்லை: செலின் கவுண்டர்
தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் செலின் கவுண்டர்.
தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் செலின் கவுண்டர்.
கரோனா கட்டுப்பாட்டுக்காக அமெரிக்காவில் அதிபர் (தேர்வு) ஜோ பைடன் அமைத்துள்ள சிறப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளார் டாக்டர் செலின் ராணி கவுண்டர்.
இவருடைய தந்தை ராஜ் கவுண்டரும் முன்னோர்களும் ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள்.
இப்போதும் மொடக்குறிச்சியுடன் தொடர்பிலுள்ள செலின் கவுண்டர், அறக்கட்டளைவழி இங்குள்ள பள்ளிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார், வந்தும் செல்கிறார்.
ஜோ பைடன் குழுவில் இடம் பெற்ற செலின், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதே அவருடைய பெயரிலுள்ள கவுண்டர் என்ற சொல்லின் மூலம்தான் முதன்முதலில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் தெரிய வந்தது.
இதையும் படிக்கலாம்.. அமெரிக்க அதிபர் (தேர்வு) பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் ஈரோட்டுப் பெண்!
இதனிடையே, கவுண்டர் என்ற சொல்லை அவர் பெயரிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கூறிவந்தனர்.
இதுதொடர்பாக, சுட்டுரையில் குறிப்பிட்டுள்ள செலின் கவுண்டர், பெயரை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
"நான் பிறப்பதற்கும் முன்னரே, 1970-களின் தொடக்கத்தில் என்னுடைய தந்தை தன்னுடைய பெயரை கவுண்டர் என மாற்றிக் கொண்டார். என்னுடைய பெயர்தான் என் பெயர். இது என்னுடைய வரலாற்றின், அடையாளத்தின் ஒரு பகுதி, அந்த வரலாற்றில் சில வலிப்பதாக இருந்தாலும்கூட. நான் திருமணம் செய்துகொண்டபோது என்னுடைய பெயரை நான் மாற்றிக்கொள்ளவில்லை. இப்போதும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார் செலின் கவுண்டர்.