அண்ணாமலைக்கு சீட் மறுப்பா? தமிழிசை பதில்
பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாடது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.
பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாடது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை. பாஜக பட்டியலில் மூத்தவர்களும் உள்ளனர். இளையோரும் இருக்கிறார்கள். சரியானவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதும் இல்லை. யாரும் புறக்கணிக்கப்படுவதும் இல்லை.
வோட்பாளர்களை பாஜக தலைமைதான் முடிவு செய்கிறது. கட்சியில் பாரபட்சம் கிடையாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவாக அமையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
According to the Dinamani report, former Tamil Nadu BJP President Tamilisai Soundararajan clarified the following regarding K. Annamalai not contesting in the 2026 Assembly elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.