முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் நூலக வார விழா புத்தகக் கண்காட்சி

தேசிய புத்தகத் திருவிழா - நூலக வாரவிழாவையொட்டி,  டி.எம்.எஸ். வளாகத்தில் புத்தக விற்பனைக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது.

Updated On : 19 நவம்பர் 2020, 2:54 pm IST
நூலக வார விழா புத்தகக் கண்காட்சி
பகிர்:

சென்னையில் மாநில பொது சுகாதார நூலகமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து  நடத்தும் தேசிய புத்தகத் திருவிழா - நூலக வாரவிழாவையொட்டி,  டி.எம்.எஸ். வளாகத்தில் புத்தக விற்பனைக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது.

புத்தகக் காட்சியைப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் தி.சி. செல்வ விநாயகம் தொடக்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

திறப்புவிழாவில் அரசு உயர் அலுவலர்களும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனப் பொது மேலாளர் தி. ரத்தினசபாபதி, மண்டல மேலாளர் எஸ்.மணவாளன், கிளை மேலாளர் சா.குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

"மக்களிடையே வாசிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்குடன் நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி, பல்வேறு வகையிலும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு உறுதுணையாக அமையும்.

"இதன் மூலம் டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள அனைத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், எழுத்தர்கள், பணியாளர்கள் மிகவும் பயனடைவார்கள். அருகிலுள்ள கல்லூரிகள், பள்ளிகள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோரும் பயன்பெறுவார்கள்.

"பல ஆயிரக்கணக்கான நூல்கள் இடம்பெற்றுள்ள  இந்தப் புத்தகக் கண்காட்சி, காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒரே இடத்தில் எல்லா நூல்களும் கிடைக்கும்.  வாங்கும் நூல்களுக்கு விலையில் 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.  நூலகங்களுக்குக் கூடுதலாகத் தள்ளுபடி  வழங்கப்படும்.

"இந்தக்  கண்காட்சி நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும்" என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.