ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த பதினான்கு வயது சிறுவன் அகஸ்திய ஜெய்ஸ்வால், இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயது பட்டதாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உஸ்மானியா பல்கலைக்கழகம் நடத்தும் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் படிப்பிற்கான இறுதியாண்டு தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
இதில், தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரரும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவனுமான அகஸ்தியா ஜெய்ஸ்வால் தேர்ச்சி பெற்று இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் (14 வயதில்) பட்டப்படிப்பை முடித்த முதல் சிறுவன் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அகஸ்தியா ஜெய்ஸ்வால் கூறியதாவது:
"தெலங்கானாவில் 9 ஆவது வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் சிறுவனான நான், 11 ஆவது வயதில் 63 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் சிறுவன் என்ற பெருமையை பெற்ற நான், உஸ்மானியா பல்கலைக்கழகம் நடத்தும் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, இந்தியாவில் மிகக்குறைந்த வயதில் (14 வயது) பட்டதாரியான முதல் சிறுவன் என்ற பெருமையை பெற்றிருக்கிறேன்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
மேலும் "என் பெற்றோர், எனது ஆசிரியர்களின் ஆதரவோடு, எதுவும் சாத்தியமற்றது என்பதை நிரூபிக்கும் சவால்களை நான் செய்து வருகிறேன்.
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரரான அகஸ்தியா, ஏ முதல் இசட் வரை உள்ள எழுத்துக்களை 1.72 வினாடிகளில் தட்டச்சு செய்யும் திறமையையும், 100 வரையிலான பெருக்கல் வாய்ப்பாடுகளை சொல்லும் திறமையும், இரு கைகளாலும் எழுதுவேன். நான் ஒரு சர்வதேச ஊக்க பேச்சாளர்." நான் மருத்துவராக விரும்புகிறேன். எனவே அடுத்து மருத்துவம் படிப்பேன் என்று கூறினார்.
அவரது தந்தை அஸ்வினி குமார் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்பு திறமை உள்ளது என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தினால், ஒவ்வொரு குழந்தைகளாலும் வரலாற்றை உருவாக்க முடியும் என்று கூறினார்.
தாய் பாக்யலட்சுமி கூறுகையில், “நாங்கள் எப்போதும் அவனிடம் பாடங்களைப் புரிந்து கொள்ளும்படி கூறுவோம். அவன் எப்போதும் எங்களிடம் கேள்விகளைக் கேட்பான். நாங்கள் அவனுக்கு புரியும் நடைமுறையில் பதிலளிப்போம். ” என்று கூறினார்.
இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் பட்டம் பெற்றுள்ள அகஸ்தியாவுக்கு, அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.