வளர்ச்சி திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வெங்கடாசலம். 
தற்போதைய செய்திகள்

ஓமலூர் அருகே 1.3கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ஓமலூர் அருகே ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வெங்கடாசலம் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

DIN

ஓமலூர் அருகே ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வெங்கடாசலம் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். 

இதில், முன்னதாக அரசு பொறியியல் கல்லூரி அருகேயுள்ள குடித்தெருவில் வீதிச்சாலை இல்லாமல் பொதுமக்கள் நீண்ட நாள்களாக சிரமத்திற்கு உள்ளானார்கள். இதுகுறித்து மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீதிசாலை மற்றும் கோட்டகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டத்தையும் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பாகல்பட்டி மற்றும் பலகுட்டப்பட்டியில் ரூ.74 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டப்பேரவை உறுபினருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு அதிகாரிகளிடம் உடனடியாக பரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டார். 

பூமிபூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இனிப்புகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT