ஆடுகளம்! 
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில், செப். 3, 2020

செய்திகள் - படங்களில்

DIN

ஆர்டர்: புது தில்லியில் ரயில் பாதையொன்றில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒட்டியுள்ள  குடிசைப் பகுதி குழந்தைகள். தில்லியில் 140 கி.மீ. நீளத்துக்கு ரயில் பாதைகளையொட்டியுள்ள 48 ஆயிரம் குடிசை வீடுகளை  மூன்று மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்!

அடுத்தது என்ன? புது தில்லியில் வியாழக்கிழமை வங்கிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கம்பிகளுக்கு வெளியே: சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விடுதலையான டாக்டர் கஃபீல் கான், ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் செயல்களை அம்பலப்படுத்துவதால் தாம் குறிவைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார் கஃபீல்கான்.

நீருக்கு நடுவே தீ: இலங்கைத் தீவுக்குக் கிழக்கே 38 கடல் மைல்கள் (78 கி.மீ.) தொலைவில் நடுக்கடலில் தீப்பற்றியெரியும் கப்பல். பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த எண்ணெய்க் கப்பலின் படத்தை  இலங்கை விமானப் படை வெளியிட்டுள்ளது.

தேரோட்ட கலவரம்: நேபாளத்திலுள்ள லலித்பூரில் வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்றுப் பொது முடக்கத்தை மீறி மத ஊர்வலம் நடத்தியவர்களைக் காவல்துறையினர் கலைக்க முயன்றபோது பெரும் வன்முறையில் இறங்கினர். தொற்றுப் பரவல் அச்சத்தால் மாதக்கணக்கில் தேரோட்டம் நடைபெறாமல் தடைப்பட்டு, தேரிலேயே மச்சேந்திரநாதர் திருமேனி வைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக இந்தத் தேரோட்டம் ஒரு மாத காலம் நடைபெறும். இன்று தேரை இழுக்க முயன்றதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் மோதிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

நறுவீ மருத்துவனை நிறுவனா் தினவிழா: மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: கதிா் ஆனந்த் எம்.பி. வழங்கினாா்

போக்குவரத்துத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் இருந்து 60% அதிகரிப்பு: ரேகா குப்தா!

3 மாதத்தில் 540 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

SCROLL FOR NEXT