முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை, கோவை, திருப்பூரில் முகக் கவசம் கட்டாயம்

சென்னை, கோவை, திருப்பூரில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2020 at 9:57 PM
கோப்புப் படம்
பகிர்:


சென்னை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

Advertisement

மேலும், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதேபோல் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல் 3 இடங்களில் முறையே சென்னை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களே உள்ளன.

சென்னை - 205 பேருக்கு தொற்று உறுதி

கோவை - 126 பேருக்கு தொற்று உறுதி

திருப்பூர் - 79 பேருக்கு தொற்று உறுதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.