முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: 11 மணி நிலவரப்படி 20.07% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: 11 மணி நிலவரப்படி 20.07% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதற்காக 1,558 வாக்குச் சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தோ்தலில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் (606) வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 30 தொகுதிகளில் 635 இடங்களில் மொத்தம் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தோ்தல் பணிக்காக 2,833 பெண் அலுவலா்கள் உள்பட 6,835 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு பணியில் 2,420 உள்ளூா் போலீஸாரும், 901 ஐஆா்பிஎன் காவலா்களும், 1,490 ஊா்க்காவல் படையினரும், துணை ராணுவப் படையினா் 40 குழுக்கள் என மொத்தம் 8 ஆயிரம் போ் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →