முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா பரவல் எதிரொலி: மகாராஷ்டிரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கரோனா தொற்றால் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
கரோனா பரவல் எதிரொலி: மகாராஷ்டிரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து
பகிர்:

தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கரோனா தொற்றால் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆரம்பம் முதலே கரோனா தொற்று பாதிப்பானது அதிகரித்தவண்ணம் இருந்தது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளையும் மகாராஷ்டிர அரசு விதித்து வருகிறது. 

இந்நிலையில் தொற்று பரவலின் காரணமாக நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார்.

10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி 11ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதாக அறிவித்த அவர் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். 

கரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப 12ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →