தற்போதைய செய்திகள்

கேரளத்தில் இடது, புதுவை, அசாமில் பாஜக, மே.வங்கத்தில் இழுபறி: ரிபப்ளிக் டிவி

DIN

கேரளத்தில் இடது முன்னணி 72 முதல் 80 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று ரிபப்ளிக் டிவி -சிஎன்எக்ஸ் நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி 58 முதல் 64 இடங்களையும் பா.ஜ.க. அணி 1 முதல் 5 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கணித்துள்ளது. 

புதுச்சேரியில் பாஜக அணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பாஜக அணி 16 முதல் 20 இடங்களையும் காங்கிரஸ் அணி 11 முதல் 13 இடங்களையும் கைப்பற்றக் கூடும் என்று கணிப்பில் தெரியவந்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் முடிவுகள் இழுபறியாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

திரிணாமுல் கூட்டணி 128 முதல் 138 இடங்களையும் பாஜக அணி 138 முதல் 148 இடங்களையும் காங்கிரஸ் - இடதுசாரி அணி 11 முதல் 21 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

]அசாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கும் என்று  கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பாஜக அணி 74 முதல் 84 தொகுதிகளையும் காங்கிரஸ் அணி 40  முதல் 50 தொகுதிகளையும் பிற கட்சிகள்  13 தொகுதிகளையும் கைப்பற்றலாம் என அறிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT