தற்போதைய செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது 

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, கடந்த 9-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், கடந்த 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,405 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராம் ரூ.72.80 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,425

1 பவுன் தங்கம்...............................35,400

1 கிராம் வெள்ளி.............................75.75

1 கிலோ வெள்ளி.............................75,750

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,430

1 பவுன் தங்கம்...............................35,440

1 கிராம் வெள்ளி.............................73.30

1 கிலோ வெள்ளி.............................73,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT