ஓசூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம சாவு 
தற்போதைய செய்திகள்

ஓசூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம சாவு

ஓசூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


ஓசூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி சேர்ந்தவர் மோகன்(41) இவர் குடும்பத்துடன் மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் அருகில் உள்ள சொர்ணபூமியில் வாடகை வீட்டில் தங்கி வந்தார். இவருடைய மனைவி ரம்யா(25) இவருடைய தாயார் வசந்தா(61) இவரது மகள் அன்னமை(11), இவர்கள் நான்கு பேரும் சொர்ணபூமியில் வாடகை வீட்டில் தங்கி வந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 4 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மோகன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்ததாகவும் அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகம் ஏற்பட்டு உள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரது மகள் அவரது தாய் அவரது மனைவி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணையை ஓசூர் டிஎஸ்பி முரளி செய்து வருகிறார்.

சம்பவ இடத்திற்கு ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ சத்யா, சர்வேஷ் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 

நால்வரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக வெளிநாடு செல்லும் போப் 14-ம் லியோ!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

டூட் டிரைலர் தேதி!

பாலிவுட் வாசம்... சான்யா!

ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக் சர்மா!

SCROLL FOR NEXT