முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
பகிர்:

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். 

அவரது உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது உடல் மக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மதுசூதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனனின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலா மதுசூதனனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மதுசூதனனின் உடல் இன்று  வெள்ளிக்கிழமை மாலை மூலக்கொத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →