உத்தமபாளையம்: தேனி மாவட்டம் குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த 3 வாரம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அர்ச்சனைகள் தவிர்க்கப்பட்டன.
இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் பல்வேறு திருவிழா நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருதால் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத 4 ஆவது சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் வருகை இருக்கும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் கோயில் நுழைவுப் பகுதி கோயில் நிர்வாகம் சார்பில் இரும்பு தகரத் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.