தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் தர்ப்பணம் செய்யத் தடை: வெறிச்சோடியது புதிய கடற்கரை

DIN

தூத்துக்குடியில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடற்கரை சாலை மற்றும் புதிய கடற்கரை தாமிரவருணி ஆற்றங்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆடி அம்மாவாசை அன்று கடல் மற்றும் தாமிரவருணி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீராடுவது வழக்கம். 

   கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கடல் மற்றும் தாமிரவருணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.  

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்

இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் செல்லும் கடற்கரை சாலை மற்றும் புதிய கடற்கரை, தாமிரவருணி ஆற்றங்கரை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடி துறைமுகம் சாலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி புதிய கடற்கரையில் பொதுமக்கள் யாரும் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்காததால் புதிய கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் இன்று அடைக்கப்பட்டு உள்ளதால் சிலர் வீடுகளில் தர்ப்பணம் செய்து கோவில் முன்பு நின்று கோபுர தரிசனம்  செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT