தற்போதைய செய்திகள்

சேவூர் அருகே பஞ்சு கழிவு அரைவை ஆலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் நாசம்

DIN



அவிநாசி: சேவூர் அருகே பஞ்சு கழிவு அரைவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள்  சேதமடைந்தது. 

சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோனில், தனியார் பஞ்சு கழிவு அரைக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

தீ விபத்தால் புகை மண்டலாக காட்சியளிக்கும் பஞ்சு கழிவு அரைவை ஆலை

இந்நிலையில், வழக்கம் போல தொழிலாளர்கள் வியாழக்கிழமை இயந்திரத்தை இயங்கிய போது, எதிர்பாராத விதாமாக மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து உண்டானது. 

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடைடே உள்ளிருந்த தொழிலாளர்கள் குடோனில் இருந்த பஞ்சு மூட்டைகளை வெளியேற்றி, தங்களையும் காப்பாற்றிக் கொண்டனர். 

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

இருப்பினும் தீ மள மளவென பரவியதில், உள்ளிருந்த இயந்திரம், கழிவு பஞ்சுகள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது. 

இது குறித்த சம்பவயிடத்திற்கு வந்த சேவூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT