முகப்பு
தற்போதைய செய்திகள்

மது போதையில் தந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மகன்

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மது போதையில் தந்தையை கத்திரிக்கோலால் குத்தி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட், 2021 at 12:24 PM
கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன்
பகிர்:


கோவை சொக்கம்புதூர் பகுதியில் மது போதையில் தந்தையை கத்திரிக்கோலால் குத்தி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வாழைக்காய் மண்டி நடத்தி வந்துள்ளார். இவருடைய மகன் கோவிந்தராஜ் திருமணமாகி இவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாகவே தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி வீடு விவகாரத்தில் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு மகன் கோவிந்தராஜன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தந்தை ராமச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளார்.

Advertisement

அப்போது அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது தந்தையின் கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார். 
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.