‘கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும்’: மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்துகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | திருவிழாக்களில் மக்கள் அதிகம் கூடுவதால் கரோனா பரவுகிறது
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது
மேலும் கிராம சபை கூட்டங்கள் என்பது மக்கள் நேரடியாக பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளையும், தேவைகளையும் அரசுக்கு தெரிவிக்கும் ஜனநாயகத்தின் மிக முக்கியமானதொரு வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளதோடு கிராம சபை கூட்டங்கள் உரிய முறையில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,.