தற்போதைய செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்: தமிழக அரசைப் பாராட்டிய கமல்ஹாசன்

DIN

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு புதிதாக பணி ஆணை வழங்கப்பட்டதற்கு மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆகமம் கற்ற 58 பேருக்கு அர்ச்சர் பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பதிவில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம்.

கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT