முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில்புதிதாக 8,603 பேருக்கு தொற்று: 415 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,603 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:



புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,603 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 8,603

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,46,15,757.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 8,190
இதுவரை குணமடைந்தோர்: 3,40,53,856.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.35​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்:  415. உயிரிழந்தோர் விகிதம் 1.36 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,70,530.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை:  99,974. இது கடந்த 547 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.29 சதவிகிதமாக குறைந்துள்ளது.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.81% ஆக உள்ளது. இத கடந்த 20 நாள்களாக சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 0.69% ஆக உள்ளது. இத கடந்த 61 நாள்களாக 2% சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் 126.53  கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 64,60,26,786 பரிசோதனைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் 12,52,596 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.