தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிப்.6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி

ANI

குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மீண்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் கரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டன. அவ்வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையிலும் பொதுமக்களுக்கு தேதி குறிப்பிடாமல் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து பார்வையாளர்கள் பார்வையிட குடியரசுத் தலைவர் மாளிகை பிப்ரவரி 6ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் அனுமதி வழங்கப்படும். பார்வையாளர் இணையதளத்தில் முன்பதிவு (நபர் ஒன்றுக்கு ரூ. 50 கட்டணம்) செய்து குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT