தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 3,715 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 3,715 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,715 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 25 லட்சத்து 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 436 பேருக்கும், ஈரோட்டில் 330 பேருக்கும், சேலத்தில் 233 பேருக்கும், தஞ்சாவூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 217 பேருக்கும், சென்னையில் 214 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 4,029 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 32,017-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 34,926 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 54 போ் பலியாகியதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,059-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT