நவரசா திரைப்படத்தின் டீசர் நாளை (ஜூலை 8) வெளியீடு 
தற்போதைய செய்திகள்

நவரசா திரைப்படத்தின் டீசர் நாளை (ஜூலை 8) வெளியீடு

நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட நவரசா திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட நவரசா திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட திரைப்பட ஊழியர்களுக்கு உதவும் விதமாக இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகியோர் நவரசா திரைப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக இயக்கப்பட்டுள்ள 9 குறும்படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் நவரசா திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிராவை நோக்கி நகரும் தமிழ்நாடு - உ. பி. ஆட்டம்

போலி செயலி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் திருட்டு

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு

மின்சாரக் காா்கள் விற்பனை 57% உயா்வு

SCROLL FOR NEXT