முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆப்கானிஸ்தான் விமானப் படைத் தாக்குதல்களில் 40 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த 40 தாலிபன்கள் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்

Updated On : 22 ஜூலை, 2025 at 11:21 AM
ஆப்கானிஸ்தான் விமானப் படைத் தாக்குதல்களில் 40 தலிப்பான்கள் பலி
பகிர்:

காபுல்: ஆப்கானிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதல்களில் இதுவரை 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் அங்கிருக்கும் தீவிரவாத அமைப்பான தலிபான்களுக்கும் இடையே சமீப காலமாக தாகுதல்கள் அதிகரித்து வந்த நிலையில் ஆப்கான் விமானப் படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 40 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டதாகவும் மேலும்  பயங்கர ஆயுதங்களையும் , வெடிபொருள்களையும் தாக்குதல் மூலம் அழித்திருப்பதாக இராணுவத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அமெரிக்க மற்றும் நாடோ (NATO) படைவீரர்கள் ஆப்கானைவிட்டு விலகிய பிறகு தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்தது என்பது குறிப்பிடதக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.