கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ ஹெராயின் பறிமுதல்
கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ அளவுள்ள ஹெராயினை கடத்தி வந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த 32 வயதான அஷ்ரஃப் என்பவர் பிடிபட்டார்.
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ அளவுள்ள ஹெராயினை கடத்தி வந்த டான்சானியா நாட்டைச் சேர்ந்த 32 வயதான அஷ்ரஃப் என்பவர் பிடிபட்டார்.
இது பற்றி இந்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, தொலைவசதி வழி சிகிச்சையளிக்கும் மருத்துவ உதவியாளர் விசாயில் தான்சானியாவிலிருந்து துபாய் வழியாக கொச்சி விமான நிலையம் வந்தார். அங்கு அவரை சோதனை செய்தபோது அவரது பையில் ஹெராயின் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.