தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: பிரெஞ்சு தேசிய தின விழா

DIN

புதுச்சேரி: பிரெஞ்சு தேசிய தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தும் வகையில் புதன்கிழமை காலை கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி புதுச்சேரி பிரெஞ்ச் துணைத் தூதர் லிசே டல்போட் பரே அவர்களும், புதுச்சேரி துணை மாவட்ட ஆட்சியர் (தலைமையகம்) கே. முரளிதரன் அவர்களும், போர் வீரர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

புதுச்சேரியில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிமையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT