முகப்பு
தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள்.
தற்போதைய செய்திகள்

மேக்கேதாட்டில் அணைக் கட்டும் முயற்சி: தஞ்சாவூரில் உண்ணாவிரதம்

மேக்கேதாட்டில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள்.
பகிர்:

தஞ்சாவூர்: மேக்கேதாட்டில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மேக்கேதாட்டில் அணைக் கட்ட அனுமதிக்கக் கூடாது. ராசிமணலில் அணைக் கட்டத் தமிழகத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

குறுவை பயிரைக் காப்பாற்ற, சம்பா சாகுபடியைத் தொடங்க உரிய தண்ணீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அணைகளின் நீர் நிர்வாகத்தைக் காவிரி மேலாண்மை ஆணையம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

சங்கப் பொதுச் செயலர் பி.ஆர்.  பாண்டியன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →