தற்போதைய செய்திகள்

சங்ககிரியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா

DIN

சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய  பேருந்து நிலையம் அருகே  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட  தலைவர்  சி.எஸ்.ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 

சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர்  கே ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். 

முன்னாள் மாவட்ட பொதுச்செயலர்கள் பிபி.சுப்பிரமணியன், செங்கோட்டுவேல், முன்னாள் மாநில துணை செயலாளர் நடராஜ், முன்னாள் நகரத்தலைவர் காசிலிங்கம், நகரச்செயலர் எ.ரவி, நிர்வாகிகள் கரும்பாயிரம், அங்கமுத்து, லோகநாதன், சின்னுசாமி, செல்வம், ஆறுமுகம், ஜெகநாதன், கருப்பண்ணன்,குமார், சரவணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாதன், கார்த்தி, நவீன்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT