முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் மகனுக்கு மருந்து வாங்க 300 கி.மீ சைக்கிளில் சென்ற தந்தை

நரம்பு பாதிப்பால் சிகிச்சைபெற்று வரும் மகனுக்காக அவரது தந்தை 300 கி.மீ. தூரம் வரை சைக்கிளில் சென்று மருந்துகள் வாங்கி வந்த சம்பவம் கர்நாடகத்தில் நடைபெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
பகிர்:

நரம்பு பாதிப்பால் சிகிச்சைபெற்று வரும் மகனுக்காக அவரது தந்தை 300 கி.மீ. தூரம் வரை சைக்கிளில் சென்று மருந்துகள் வாங்கி வந்த சம்பவம் கர்நாடகத்தில் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரு அருகே உள்ள டி.நரசிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு 10 வயதேயான மகன் உள்ளார். இவர் நரம்பு பாதிப்பால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் கரோனா பாதிப்பால் கர்நாடகத்தில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டதால் தனது மகனுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் வாங்க ஆனந்த் சிரமப்பட்டு வந்துள்ளார். தினந்தோறும் தனது மகன் மருந்துகள் உட்கொள்ள வேண்டி இருப்பதால் அவருக்கு தேவையான மருந்துகளை வாங்க பெங்களூரு செல்ல ஆனந்த் முடிவெடுத்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து காவல்துறை நடமாட்டம் இல்லாத சாலை வழியாக கிட்டத்தட்ட 300 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்து பெங்களூரு மருத்துவமனையை அடைந்துள்ளார். 

இதனையறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அவருக்கு தேவையான மருந்துகளையும் அவர் வீடு திரும்புவதற்கு வழிச் செலவிற்கான பணத்தையும் வழங்கி உதவியுள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட ஆனந்த் 2 நாள்கள் பயணித்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

மகனுக்காக சைக்கிளில் 300 கி.மீ. பயணித்து சென்று தந்தை மருந்துகள் வாங்கி வந்த சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →