தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் அமைச்சரவை அமைவதில் இழுபறி: பாஜக ஆலோசனை

DIN

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சரவை அமைவதில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் மாநில பாஜக தலைவர் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை பெற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு மற்றும் நியமன எம்எல்ஏக்கள் மூலம் பாஜகவின் பலம்  12ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் பாஜக பங்கீடு கேட்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவை அமைக்கப்படாமல் தொடர் இழுபறி நிலவி வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் நமச்சிவாயம் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT