சென்னை உயர்நீதிமன்றம் 
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட திருப்பூர் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் மாநகராட்சியில் 368 இறைச்சி கடைகள் உள்ளன. இதில் 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி, பொதுமுடக்க காலத்திலும் இயங்கி வருகிறது. அந்த கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு தமிழக அரசு, திருப்பூர் மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு , விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT